Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தளவாடங்களுக்கான புதிய திறன் வளர்ச்சிக் கட்டமைப்பு அறிமுகம்

தளவாடங்களுக்கான புதிய திறன் வளர்ச்சிக் கட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அந்தத் துறையின் சீரமைப்பைத் துரிதப்படுத்தும் அரசாங்கத் திட்டத்தின் ஒரு கூறாக அது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
தளவாடங்களுக்கான புதிய திறன் வளர்ச்சிக் கட்டமைப்பு அறிமுகம்

படம்: Calvin Hui

தளவாடங்களுக்கான புதிய திறன் வளர்ச்சிக் கட்டமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அந்தத் துறையின் சீரமைப்பைத் துரிதப்படுத்தும் அரசாங்கத் திட்டத்தின் ஒரு கூறாக அது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலையில் ஒருவரின் கடமைகள், வாழ்க்கைத் தொழிலுக்கான பாதை, தளவாடத் துறைக்கான தற்போதைய திறன்களுடன், தேவைப்படும் திறன்கள் முதலியவற்றை அது அடையாளம் காணும்.

 "வேலைக்கு ஏற்ப சரிசெய்து கொண்டு வளர்தல்" திட்டத்தின் கீழ் அந்தத் துறையின் சீரமைப்பை ஊழியரணி சிங்கப்பூர் அமைப்பு ஆதரிக்கிறது. நிபுணத்துவ மாற்றுத் திட்டங்கள் அதில் அடங்கும்.

YCH Group's Supply Chain Cityயின் திறப்பு விழாவில் பேசிய பிரதமர் லீ சியென் லூங் தளவாடச் சீரமைப்புத்துறை வளர்ச்சி கண்டால் அது $8.3 பில்லியனை ஈட்டக்கூடும் என்றும் சுமார் 2000 புதிய வேலைகளை உருவாக்கக்கூடும் என்றும் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்