Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையம் பயணிகளின் எண்ணிக்கை 8.2 % உயர்வு

சாங்கி விமான நிலையத்தைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு என்ற அடிப்படையில கடந்த மாதம் 8.2 விழுக்காடு உயர்ந்துள்ளது.   சு

வாசிப்புநேரம் -

சாங்கி விமான நிலையத்தைப் பயன்படுத்திய பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு என்ற அடிப்படையில், கடந்த மாதம் 8.2 விழுக்காடு உயர்ந்துள்ளது.   சுமார் ஐந்தரை மில்லியன் பயணிகள் சாங்கி விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

தென்கிழக்காசியா, வட கிழக்காசியா, தெற்காசியா ஆகிய வட்டார நாடுகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததே அதற்குக் காரணம்.
சென்ற மாதம் முதல் தேதி நிலவரப்படி, சாங்கி விமான நிலையத்திலிருந்து 100க்கும் அதிகமான விமான நிறுவனங்கள் சேவை வழங்கி வருகின்றன.
உலகெங்கும் உள்ள 90 நாடுகளைச் சேர்ந்த, மொத்தம் 380 நகரங்களுக்கு அவை சேவை வழங்குகின்றன. உலகின் முதல் 10 சந்தைகளுள், சீனா முன்னனி வகித்தது.
அதன் சந்தை கிட்டதட்ட 31 விழுக்காடு வளர்ச்சிக் கண்டது. சென்ற மாத இறுதியில் கொண்டாடப்பட்ட சீனப் புத்தாண்டு, அதற்குக் காரணம் என நம்பப்படுகிறது.
இந்தியா, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் ஈரிலக்க வளர்ச்சியை எட்டியது. ஆண்டுக்காண்டு என்ற அடிப்படையில், கிட்டதட்ட 31,600 விமானங்கள் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கி, வெளியேறியதாக சாங்கி விமான நிலையக் குழுமம் வெளியிட்ட அறிக்கைக் குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்