Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இரண்டாவது செயற்கைக்கோளை உருவாக்கவிருக்கும் ST Electronics நிறுவனம்

சிங்கப்பூர்: ST Electronics நிறுவனம், பூமியைக் கண்காணிக்கும் இரண்டாவது செயற்கைக்கோளை உருவாக்கவிருக்கிறது. அத்தகைய முதல் செயற்கைக்கோளான TeLEOS-1 விண்ணில் செலுத்தப்பட்டு ஓராண்டு நிறைவுற்ற வேளையில் ,இரண்டாவது செயற்கைக் கோளை உருவாக்கத்  தயாராக இருப்பதாய் நிறுவனம் கூறியது.

வாசிப்புநேரம் -

தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் பங்காளித்துவத்தில் TeLEOS-2 உருவாகவிருக்கிறது. புதிய செயற்கைக்கோள் வானிலை குறித்த தகவல்களைத் தொடர்ந்து பெற வகைசெய்யும். மேகமூட்டம் அதிகமாக இருந்தபோதும் அதைச் சாத்தியமாக்கும் திறன்கொண்டது TeLEOS-2.

750 கிலோகிராம் எடைகொண்ட அந்தச் செயற்கைக்கோளில் சிங்கப்பூரிலேயே உருவாக்கப்பட்ட ரேடார் கட்டமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். அது புதிய பல வாய்ப்புகளுக்குத் திறவுகோலாக இருக்கும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் S ஈஸ்வரன் குறிப்பிட்டார். செயற்கைக்கோள் அனுப்பும் தகவல்கள், உள்துறை, தற்காப்பு அமைச்சுகளுக்கும், தேசியச் சுற்றுப்புற அமைப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும். வருங்காலத்தில் சிறிய செயற்கைக்கோள் ஆய்வு மேம்பாட்டுக்கு சிங்கப்பூர் தொடர்ந்து ஆதரவு தரும் என்று அமைச்சர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்