Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கத் தவறிய நிறுவனத்துக்கு அபராதம்

ஐந்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தவறிய உள்ளூர் நிறுவனமொன்று தண்டிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: ஐந்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கத் தவறிய உள்ளூர் நிறுவனமொன்று தண்டிக்கப்பட்டுள்ளது.

உலோகப் பொருட்களை உற்பத்தி செய்யும் அந்த நிறுவனத்துக்கு $17, 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

மனிதவள அமைச்சு அதனைத் தெரிவித்தது.

Raycom Engineering & Aerospace நிறுவனம், சம்பளமும், மத்திய சேமநிதியுமாக மொத்தம் சுமார் $ 30,000 தொகையை, உள்ளூர் ஊழியர்களுக்குக் கொடுக்கத் தவறியது, விசாரணையில் உறுதியானது. 

வெளிநாட்டு ஊழியர்களை பணியில் அமர்த்தவும் அந்நிறுவனத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புகார் வந்ததைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமைச்சு அந்நிறுவனத்திடம் தனது விசாரணையைத் தொடங்கியது.

விசாரணையின் முடிவில், பாதிக்கப்பட்ட ஐந்து ஊழியர்களுக்கும் அவர்களுக்கு உரிய தொகை வழங்கப்பட்டதாக, மனிதவள அமைச்சு குறிப்பிட்டது. 

சிங்கப்பூரில், ஊழியரின் சம்பளத் தேதி முடிந்த ஏழு நாட்களுக்குள் அவருக்கு உரிய சம்பளத்தைத் தரத் தவறினால், அது குற்றமாகக் கருதப்படும். 

கடந்த மூவாண்டுகளில், 158 முதலாளிகள், சம்பளம் தொடர்பான பிரச்சினைகளுக்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். 

சம்பளப் பிரச்சினையால் பாதிக்கப்படும் ஊழியர்கள், WorkRight எனப்படும் நேரடித் தொலைபேசிக்கு அழைத்து ரகசியமாகப் புகார் செய்யலாம்.

அதற்குரிய எண் : 1800-221 9922

அல்லது கீழ்க்கண்ட முகவரிக்கு, மின்னஞ்சல் அனுப்பலாம்.

workright [at] mom.gov.sg 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்