Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கேலாங்கில் 3 நாள் அதிரடி சோதனை - 60 பேர் கைது

கோலாங் வட்டாரத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் சந்தேகத்தின் பேரில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

வாசிப்புநேரம் -
கேலாங்கில் 3 நாள் அதிரடி சோதனை - 60 பேர் கைது

படம்: SPF

கோலாங் வட்டாரத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் சந்தேகத்தின் பேரில் 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

3 நாட்கள் நீடித்த சோதனையை பிடோக் காவல் துறைப் பிரிவு வழிநடத்தியது. அவர்களுடன் சிங்கப்பூர் குடிநுழைவுத்துறை அமலாக்க அதிகாரிகள், குற்றப் புலனாய்வுத் துறை, சுகாதார அறிவியல் ஆணையம் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கள்ள சிகரெட்களையும் மருந்துகளையும் விற்ற சந்தேகத்தின் பேரில் ஆடவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் S$11,000க்கும் அதிகம்.

குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் ஏழு பெண்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் நான்கு ஆடவர்கள் போதை பொருள் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

பொது இடத்தில் சூதாடியது, அந்தக் குற்றத்தை ஊக்குவித்தது ஆகிய சந்தேகத்தின் பேரில் 44 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 17 வயதிலிருந்து 65 வயதிற்கு இடைப்பட்ட ஆடவர்கள். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணை தொடர்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்