Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மார்சிலிங் குடியிருப்பாளர்களுக்குப் புதிய இணையவாசல்

மார்சிலிங் குடியிருப்பாளர்கள் தங்கள் வட்டாரத்தில் நடக்கும் அனைத்து நடவடிக்கைளையும் இனி உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

வாசிப்புநேரம் -

மார்சிலிங் குடியிருப்பாளர்கள் தங்கள் வட்டாரத்தில் நடக்கும் அனைத்து நடவடிக்கைளையும் இனி உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

அதற்காக ஒரு புதிய இணையவாசல் இன்று அறிமுகம் கண்டது. சமூக நிகழ்ச்சிகளில் அதிகம் ஈடுபட குடியிருப்பாளர்களை ஊக்குவிப்பது நோக்கம்.

உட்லண்ட்ஸ் ஸ்ட்ரீட் 11. மார்சிலிங்-இயூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹலிமா யாக்கோப் இன்று இணையவாசலைத் தொடங்கி வைத்தார்.

சுமார் 200 பேருடன் காலை உணவருந்தும் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார். இதுவரை நடந்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்களைக் குடியிருப்பாளர்கள் இணையவாசலில் பார்த்தனர்.

சமூகத்தினர் வெளியிட்டிருக்கும் சிறப்புச் சமையல் புத்தகம் ஒன்றும் இணையப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

மார்சிலிங் குடியிருப்பாளர்களைச் சென்றடைய உதவும் மற்றொரு வழி மார்சிலிங் இணையப்பக்கம் என்று கூறப்பட்டது.

பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள், இணையப் பயன்பாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் இந்த முயற்சியில் இணைந்துகொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்