Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிபர் தேர்தல் குறித்த மேல்முறையீட்டு மனு இம்மாத இறுதியில் விசாரணை

சிங்கப்பூரில் நடக்கவுள்ள அதிபர் தேர்தல் குறித்து திரு. டான் செங் போக் தொடுத்துள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இம்மாத இறுதியில் விசாரணை நடைபெறும். நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் மலாய் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அதிபர் தேர்தல் குறித்த மேல்முறையீட்டு மனு இம்மாத இறுதியில் விசாரணை

படம்: TODAY

சிங்கப்பூரில் நடக்கவுள்ள அதிபர் தேர்தல் குறித்து திரு. டான் செங் போக் தொடுத்துள்ள மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இம்மாத இறுதியில் விசாரணை நடைபெறும். நடக்கவிருக்கும் அதிபர் தேர்தல் மலாய் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதை எதிர்த்து, முன்பு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட திரு. டான் செங் போக் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.

அந்த மனு வரும் 31 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளதாக திரு. டான் செங் போக் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் வீ கிம் வீ "தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராகக்" கணக்கிடப்பட்டுத் தற்போதைய அதிபர் தேர்தல் மலாய் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளதா? என்பதில் தெளிவு கிடைக்கும் எனத் தாம் நம்புவதாகத் திரு. டான் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்