Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மேல்நிலை தேர்வு: தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்தது

: பொதுக் கல்வி சான்றிதழ் மேல்-நிலை தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்:  பொதுக் கல்விச் சான்றிதழ் மேல்-நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் குறைந்துள்ளது.கடந்த ஆண்டின் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்ட கல்வி அமைச்சு அதனைத் தெரிவித்தது.

கடந்த ஆண்டு சுமார் 12, 500 மாணவர்கள் தேர்வை எழுதினர். அவர்களில் 92.6 விழுக்காட்டினர், குறைந்தது 3 பாடங்களில், H-2 நிலை தேர்ச்சியும், பொதுத் தாள், அல்லது பகுப்பாய்வுப் பாடத்தில் தேர்ச்சியும் பெற்றனர்.

2015ஆம் ஆண்டு தேர்வை எழுதியோர் பெற்ற 93.1 விழுக்காட்டு தேர்ச்சி விகிதத்தைக் காட்டிலும் அது குறைவு.  சுமார் பத்தாண்டுக்கு முன்னர், பொதுக் கல்வி சான்றிதழ் மேல்-நிலை தேர்வுக்கான பாடத்-திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு பதிவான தேர்ச்சி விகிதமே ஆக உயர்வானது.

கடந்த ஆண்டு தேர்வை எழுதிய மாணவர்கள், இன்று மதியம் இரண்டரை மணிக்குத் தங்கள் பள்ளிக்குச் சென்று தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்