Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் சமரசப் பேச்சு - பிரதமர் வேண்டுகோள்

பிரதமர் திரு. லீ சியென் லூங், பாலஸ்தீன நிலவரம் குறித்த சிங்கப்பூரின் நிலைப்பாட்டை மறுவுறுதிப்படுத்தியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் சமரசப் பேச்சு - பிரதமர் வேண்டுகோள்

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் (படம்: AFP/Marty Melville))

சிங்கப்பூர்: பிரதமர் திரு. லீ சியென் லூங், பாலஸ்தீன நிலவரம் குறித்த சிங்கப்பூரின் நிலைப்பாட்டை மறுவுறுதிப்படுத்தியிருக்கிறார். இஸ்ரேலும் பாலஸ்தீனமும் மறுபடியும் நேரடி சமரசப் பேச்சு வார்த்தையைத் தொடங்க வேண்டுமென, சிங்கப்பூர் எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளதாக அவர் சொன்னார்.
நெடுங்காலமாக நீடிக்கும் பூசலுக்கு முடிவுகட்டும், நியாயமான, நீடித்த தீர்வை நோக்கி, அவை பணியாற்ற வேண்டுமென்றும் சிங்கப்பூர் கூறிவருவதாகத் திரு. லீ குறிப்பிட்டார். PERGAS எனப்படும், இஸ்லாமியக் கல்விமான்கள், சமய போதகர்கள் சங்கத்தின் தலைவர், பிரதமருக்கு எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து, திரு. லீயின் கருத்து வெளியாகி இருக்கிறது.  இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான பூசல் குறித்த தமது அக்கறையை, சங்கத் தலைவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
சிங்கப்பூரிலுள்ள முஸ்லிம் சமூகம், வன்முறையையும் அடக்குமுறையையும் நிராகரிப்பதாக அவர் கூறினார்.அமைதி, நல்லிணக்கத்தை உருவாக்க, இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஒன்றிணைந்து பணியாற்றுமென்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.  அதற்கு பதிலளித்த திரு. லீ, அந்த அக்கறைகளைத் தம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதாகச் சொன்னார்.
இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரண்டு தனித்தனி நாடுகள் எனும் தீர்வை எட்டுவது கடினம் என்றபோதும், இருதரப்பு மக்களுக்கும் அமைதி, பாதுகாப்பைக் கொண்டுவர அது ஒன்றே வழி என்றார் திரு.லீ. இஸ்ரேல் பாலஸ்தீன விவகாரம், முஸ்லிம் சமூகத்தினருக்கு மிகவும் உணர்வுபூர்வமான விவகாரம் என்பதைத் திரு. லீ ஏற்றுக் கொண்டார். இரண்டு நாடுகளுக்கும் இடையே அமைதி ஏற்பட, சிங்கப்பூர் உள்ளார்ந்த நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்