Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வேலை செய்துகொண்டே பல்கலைக் கழக மாணவர்கள் இனி பயிலலாம்

 பல்கலைக் கழக மாணவர்கள், வேலை செய்துகொண்டே, பட்டக் கல்வியை இனி தொடர முடியும். இவ்வாண்டின் பிற்பாதியில் தொடங்கவிருக்கும் கூட்டுறவுத் திட்டத்தின் கீழ் அது சாத்தியமாகும்.

வாசிப்புநேரம் -
வேலை செய்துகொண்டே பல்கலைக் கழக மாணவர்கள் இனி பயிலலாம்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம். (படம்: Channel News Asia)

சிங்கப்பூர்: பல்கலைக் கழக மாணவர்கள், வேலை செய்துகொண்டே, பட்டக் கல்வியை இனி தொடர முடியும். இவ்வாண்டின் பிற்பாதியில் தொடங்கவிருக்கும் கூட்டுறவுத் திட்டத்தின் கீழ் அது சாத்தியமாகும்.

Skills Future வேலை கற்றல் பட்டக் கல்வித் திட்டம் என்று அது அழைக்கப்படுகிறது.
கல்வி அமைச்சர் ஓங் யீ காங் அது பற்றி அறிவித்தார்.

குறிப்பிட்ட காலம் பல்கலைக் கழகத்திலும், குறிப்பிட்ட காலம் வேலை இடத்திலும் இருப்பதற்கு மாணவர்கள் வாய்ப்புப் பெறுவர்.

பங்காளித்துவ நிறுவனங்களில் வேலையில் சேர்ந்துகொள்ளும் வாய்ப்பையும் அவர்கள் பெறலாம். அவ்வாறு வாய்ப்பளிக்கப்பட்டால், மாணவர்களின் பட்டக்-கல்விக்கு ஆகும் செலவை அந்நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளும்.

எதிர்காலப் பொருளியலுக்கான துறை-சார்ந்த தேவைகளையும், மாணவர்களின் வாழ்க்கைத் தொழில் கனவுகளையும் பூர்த்திசெய்ய அந்தப் புதிய திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக் கழகமும், UniSIM பல்கலைக் கழகமும் அந்தத் திட்டத்தை முதலில் தொடங்கவிருக்கின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்