Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நண்பருக்குச் சலுகை காட்டியதை மறுக்கும் ஜப்பானியப் பிரதமர்

ஜப்பானியப் பிரதமர் தாம் தம் நண்பருக்குச் சலுகை காட்டியதாகக் கூறப்படுவதை மறுத்திருக்கிறார்.

வாசிப்புநேரம் -
நண்பருக்குச் சலுகை காட்டியதை மறுக்கும் ஜப்பானியப் பிரதமர்

ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபே. ( கோப்புப் படம்: AFP)

ஜப்பானியப் பிரதமர் தாம் தம் நண்பருக்குச் சலுகை காட்டியதாகக் கூறப்படுவதை மறுத்திருக்கிறார்.

அந்த விவகாரம் தொடர்பாக அவர் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். திரு. அபேக்கு மக்களிடையே இருந்த செல்வாக்கு அந்த விவகாரத்தால் மேலும் குறைந்துள்ளது.

தாம் சலுகை காட்டியதாகக் கூறப்படும் திரு. கோடாரோ காகே (Kotaro Kake) தமது பழைய நண்பர் என்று திரு. அபே கூறினார். திரு. காகே கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அவருக்குச் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தில்
கால்நடை மருத்துவமனையை நடத்தத் தாம் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுவதைத் திரு. அபே மறுத்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்