Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

போட்டித் திறனை வலுப்படுத்திக்கொள்ளும் பேருந்து ஓட்டுநர்கள்

நிலப் போக்குவரத்து ஆணையத்தின், சிங்கப்பூர் பேருந்து கழகம், பேருந்து ஓட்டுநர்கள் 20 பேருக்கு இன்று சான்றிதழ் வழங்கியுள்ளது. 

வாசிப்புநேரம் -
போட்டித் திறனை வலுப்படுத்திக்கொள்ளும் பேருந்து ஓட்டுநர்கள்

(படம்: Channel NewsAsia)

நிலப் போக்குவரத்து ஆணையத்தின், சிங்கப்பூர் பேருந்து கழகம், பேருந்து ஓட்டுநர்கள் 20 பேருக்கு இன்று சான்றிதழ் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் கழகம் செயல்படத் தொடங்கியது.

அன்றிலிருந்து 1,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் சேவையில் ஈடுபடத் தயாராயுள்ளனர்.

பேருந்து ஓட்டுநர்களுக்குப் பயிற்சி வழங்கவும், அவர்களின் போட்டித் திறனை வலுப்படுத்தவும் கழகம் தொடங்கப்பட்டது.

பேருந்து ஓட்டுநராகப் பணியாற்ற விரும்புவோர், மேம்பட்ட தொழிற்கல்வி பயிற்சித் திட்டத்தை முடிக்க வேண்டும்.

பயிற்சிக் காலம் ஐந்து நாட்கள்.

பேருந்து ஓட்டும் தொழில்முறை உரிமம் பெற இந்தப் பயிற்சியை முடிக்க வேண்டியது கட்டாயம்.

தேசியப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம், பேருந்துக் கழகம், SBS,SMRT நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றுவோர் வகுப்புகளை நடத்தினர்.

பயிற்சி பெற்றவர்களில் 70 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள்.

நெருக்கடியான நேரத்தில் விழிப்புடன் செயல்படுவது எப்படி என்பதை ஓட்டுநர்கள் இந்தப் பயிற்சியின் மூலம் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்று நம்புவதாகப் போக்குவரவு மூத்த துணையமைச்சர் ஜோசஃபின் தியோ கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்