Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

7 மணி நேரத்தில் விற்று முடிந்த கூட்டுரிமை வீடுகள்

ஹவ்காங்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹண்ட்ரட் பாம்ஸ் ரெசிடன்சஸ் (Hundred Palms Residences) எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீட்டுத் திட்டத்தின் 531 வீடுகளும் ஏழு மணி நேரத்தில் விற்று முடிந்தன.

வாசிப்புநேரம் -
7 மணி நேரத்தில் விற்று முடிந்த கூட்டுரிமை வீடுகள்

(படம்: Hoi Hup Realty)

ஹவ்காங்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹண்ட்ரட் பாம்ஸ் ரெசிடன்சஸ் (Hundred Palms Residences) எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீட்டுத் திட்டத்தின் 531 வீடுகளும் ஏழு மணி நேரத்தில் விற்று முடிந்தன.

ஒரு சதுர அடிக்கு $836 என்ற சராசரி விலையில் வீடுகள் விற்கப்பட்டன.

வீடுகளுக்கு இணையம் மூலமாக 2,700க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன.

எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீட்டு வரலாற்றில் ஆக அதிக விண்ணப்பங்களைப் பெற்ற திட்டம் அதுவென்று அதனை விளம்பரப்படுத்தும் சொத்து முகவர் நிறுவனங்களான ERA, ஹட்டன்ஸ் ஏஷியா ஆகியவை கூறின.

விலையைத் தவிர்த்து, திட்டம் அமைந்துள்ள இடமும் அதன் வடிவமைப்பும் வீடுகள் விரைவாக விற்றுத் தீர்ந்ததற்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

ஹண்ட்ரட் பாம்ஸ் ரெசிடன்சஸில் ஒரு மூவறை வீட்டின் விலை $715,000, நான்கறை வீட்டின் விலை $1.03 மில்லியன், ஐந்து-அறை வீட்டின் விலை $1.29 மில்லியன்.

இயோ சு காங் ரோட்டில் அமைந்துள்ள அந்தக் கூட்டுரிமை வீடுகள் ஹவ்காங், சிராங்கூன் வீடமைப்புப் பேட்டைகளின் அருகில் உள்ளது.

ஹோய் ஹப் நிறுவனத்தால் கட்டப்படும் இந்தக் கூட்டுரிமை வீடுகளுக்கு விண்ணப்பித்தோரில் 30 விழுக்காட்டினர் இரண்டாம் முறை வீடு வாங்குவோர். மற்ற 70 விழுக்காட்டினர் முதல் முறை வீடு வாங்குவோர். அவர்களில் பலர் அருகில் உள்ள ஹவ்காங், சிராங்கூன், செங்காங், பொங்கோல் வட்டாரவாசிகள்.

பூன் கெங், தோ பாயோ, தம்பனீஸ், யுவான் சிங் வட்டாரங்களில் பொது வீடமைப்புத் திட்டங்களை மேற்கொண்ட ஹோய் ஹப், அடுத்தாண்டு முதல் காலாண்டில் ஆங்கர்வேல் லேனில் எக்சிக்கியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்