Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சமயங்களுக்கு இடையிலான நம்பிக்கைகளை வலுப்படுத்த பிரதமர் வேண்டுகோள்

சிங்கப்பூரில் பல்வேறு சமயங்களுக்கு இடையிலான நம்பிக்கைகளை வலுப்படுத்த வேண்டுமென்று சமய, சமூகத் தலைவர்களுக்குப் பிரதமர் லீ சியென் லூங் அழைப்பு விடுத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
சமயங்களுக்கு இடையிலான நம்பிக்கைகளை வலுப்படுத்த பிரதமர் வேண்டுகோள்

(படம்: Channel NewsAsia)

சிங்கப்பூரில் பல்வேறு சமயங்களுக்கு இடையிலான நம்பிக்கைகளை வலுப்படுத்த வேண்டுமென்று சமய, சமூகத் தலைவர்களுக்குப் பிரதமர் லீ சியென் லூங் அழைப்பு விடுத்துள்ளார்.

ஒருவேளை இங்கு பயங்கரவாதத் தாக்குதல் ஏதும் நடந்தால் முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் எதிரும் புதிருமாகப் பிரிந்து விடக்கூடாது என்றார் அவர்.

பயங்கரவாதம் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் அவர் பேசினார்.

கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சும், உள்துறை அமைச்சும் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன.

பல்வேறு சமூகக் குழுக்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் அதில் கலந்து கொண்டனர்.

பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தால் சமயத் தலைவர்களும், சமூக அமைப்புகளும் அவரவர் சமூகங்களில் குறிப்பிடத்தக்க பங்காற்ற முடியும் என்று திரு. லீ கூறினார்.

மாறிவரும் உலகப் போக்கு கவலை தருவதாக அமைந்துள்ளதைச் சுட்டிய திரு. லீ, சிங்கப்பூரிலும் பயங்கரவாத மிரட்டல் அதிகரித்துள்ளதாகச் சொன்னார்.

பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராகப் போராடுவது மலாய், முஸ்லிம் தலைவர்களை மட்டும் சார்ந்தது அல்ல, அந்த முயற்சியில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்