Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குத்துச்சண்டைக்குப் பிறகு போட்டியாளர் பிரதீப் சுப்ரமணியம் மரணம்

பிரதிப் மரணத்தின் காரணத்தை உறுதிப்படுத்த விசாரணை நடைபெறுகிறது. 

வாசிப்புநேரம் -
குத்துச்சண்டைக்குப் பிறகு போட்டியாளர் பிரதீப் சுப்ரமணியம் மரணம்

(படம்: AFC)

இறுதி நிமிடத்தில் செய்த மாற்றம் ஒருவரின் உயிரைப் பலிவாங்கியது.

ஆசியக் குத்துச் சண்டை கிண்ணத்துக்கான போட்டியில்
பங்கேற்கவிருந்த  சில்வெஸ்தர் சிம் காப்புறுதிப் பிரச்சினையால் இறுதி நேரத்தில் போட்டியிலிருந்து விலகினார்.

அவருக்குப் பதில், 32 வயது உடல் கட்டமைப்புச் சம்மேளனத் தலைவர் பிரதீப் சுப்ரமணியம் போட்டியில் பங்கெடுத்தார்.

அவருக்கு எதிராக 41 வயது ஸ்திவன் லிம் களம் இறங்கினார்.

போட்டிக்குப் பிறகு பிரதீப் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

நேற்றிரவு 9 மணியளவில் அவர் மருத்துவமனையில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பிரதீப் மரணத்தின் காரணத்தை உறுதிப்படுத்த விசாரணை நடைபெறுகிறது.

(படம் : பிரதிப் சுப்ரமணியம் ஃபேஸ்புக்)

இவ்வகைப் போட்டியில் பிரதிப் கலந்துகொண்டது இதுவே முதல் முறை.

பிரதீப்பின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இந்த கடினமான காலகட்டத்தில் ஆதரவைத் தெரிவித்துக்கொள்வதாகவும் போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

போட்டியில் வெற்றியடைந்தது குறித்து ஸ்திவன் ஃபேஸ்புக் பக்கத்தில் படங்களைப் பதிவேற்றம் செய்ததோடு, பிரதீப் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

பின்னர் அந்தப் பதிவை அவர் நீக்கினார்.

தம்முடன் போட்டியிட்ட பிரதீப் மாண்ட செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்திருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் பின்னர் தெரிவித்தார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்