Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

துவாஸ் தீச்சம்பவம்: காட்டுத் தீயைப் போல் பரவிய போலிக் காணொளி

துவாஸ் கழிவுநீர் ஆலையில் நடந்த தீச்சம்பவம் பற்றிய காணொளி ஒன்று வாட்செப்பிலும் சமூக ஊடகங்களிலும் நேற்று வேகமாகப் பரவியது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: துவாஸ் கழிவுநீர் ஆலையில் நடந்த தீச்சம்பவம் பற்றிய காணொளி ஒன்று வாட்செப்பிலும் சமூக ஊடகங்களிலும் நேற்று வேகமாகப் பரவியது.

ஆனால் அந்தக் காணொளியை ஆராய்ந்த இணையவாசிகள் காணொளி போலியானது எனக் கண்டுபிடித்தனர். 

அது யூட்டியூப்பில் 2015 ஆம் ஆண்டிலும் 2016 ஆம் ஆண்டிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது.

அதில், குறைந்தது இரண்டு படங்கள் சீனாவில் நடந்த எரிவாயு ஆலை வெடிப்புச் சம்பவத்தைக் காட்டுவதாகவும் மற்றொன்று ஸிஜியாங்கில் நடந்ததைக் காட்டுவதாகவும் கூறப்பட்டது. 

அந்தக் காணொளி யூட்டியூப்பில் பலமுறை பதிவேற்றம் செய்யப்பட்டு அது இந்தியாவின் டொம்பிவலி என்னும் இடத்தில் நடந்தது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அது மட்டுமல்ல. இவ்வாண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி பிரான்சில் Flamanville அணு ஆலையில் நடந்த வெடிப்புச் சம்பவத்தின் காணொளி எனவும் யூட்டியூப்பில் பதிவாகியிருந்தது. 



 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்