Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உற்பத்தித் துறையை ஊக்குவிக்க அங் மோ கியோவில் புதிய இடவசதி

சிங்கப்பூரின் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் வகையில், புதிய இடவசதி ஒன்று அங் மோ கியோவில் உருவாக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் வகையில், புதிய இடவசதி ஒன்று அங் மோ கியோவில் உருவாக்கப்பட்டுள்ளது.

துணைப் பிரதமர் திரு. தர்மன் சண்முகரத்னம், புதிய இடத்தைத் திறந்துவைத்தார். 

300-ஆயிரம் சதுர அடி கொண்ட அந்த இடம், மின்னியல் துறையில் சுமார் 5000 வேலைகள் உருவாக உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கையடக்கச் சாதனங்களுக்கான உணர்கருவித் தீர்வுகளை உருவாக்கும் நிறுவனமான ஹெப்டகன், புதிய இடத்தில் ஈராண்டுகளில் 500 மில்லியன் வெள்ளியை முதலீடு செய்யும். 

அது, துல்லியப் பொறியியல் துறையில், கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் ஆகப் பெரிய முதலீடு என்றார் திரு. தர்மன். 

இதுபோன்ற முதலீடுகள், உயர் திறன்மிக்க வேலைகளை சிங்கப்பூரில் உருவாக்க உதவும் என்றார் அவர். 

ஏற்கனவே உள்ள ஊழியரணியின் திறனை மேம்படுத்தி எவ்வாறு அதனைப் புதிதாக உருவாகும் வேலைகளுக்குத் தயார்ப்படுத்தலாம் என்பது முக்கிய அம்சம் என்றார் திரு. தர்மன். 

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்