Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நரம்பு மண்டலத்தைத் தூண்டும் காஃபினின் பக்க விளைவுகள் என்னென்ன?

நாளொன்றுக்கு ஒரு குவளைக் காப்பியை அருந்திடவேண்டும் என்று கூறுவோரைப் பார்த்திருப்போம்.

வாசிப்புநேரம் -

நாளொன்றுக்கு ஒரு குவளைக் காப்பியை அருந்திடவேண்டும் என்று கூறுவோரைப் பார்த்திருப்போம்.

பலரின் அன்றாட உணவுப் பழக்கத்தில் முக்கிய இடம்பெறுகிறது காப்பி.

அதில் உள்ள கெஃபைன் எனும் ரசாயனம், உடலுக்குள் செல்லும்போது, விழிப்பு வருகிறது, உற்சாகம் பிறக்கிறது என்பர். 

உண்மையில் கெஃபைன் ஏற்படுத்தும் விளைவுகள் யாவை?

அறிந்துவந்தது செய்தி.

ஒரு தினத்தைத் தொடங்கி வைக்க, காலை உணவுடன் பலர் காப்பியைப் பருகுவதுண்டு.

வேறு பலர் இரவில் கண்விழித்துப் படிக்கவோ வேலை செய்யவோ அதனை நாடுகின்றனர். 

ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஓர் இளையர், ஒரே நாளில் குறைந்த இடைவெளியில் கெஃபைன் உள்ள பானங்களை அதிக அளவில் அருந்தியதால் மாரடைப்பு வந்து மாண்ட அதிர்ச்சியூட்டும் தகவல் கடந்த வாரம் வெளிவந்தது.

அவ்வாறு நேர்ந்ததற்கு அவர் அருந்திய பானங்கள் மட்டுமே காரணமாக இருக்கும் சாத்தியம் மிகக் குறைவு என்கின்றனர் மருத்துவர்கள்.

கெஃபைன், காப்பியில் மட்டும் இருப்பதில்லை. 

சுவை பானங்களிலும் ஊக்க பானங்களிலும்கூட உண்டு. 

அதற்கு மருத்துவ குணமும் உள்ளது.

கெஃபைன் நம் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்கிறார் டாக்டர் ஸ்ரீராம்.

ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாடோ விதிமுறையோ அனைவருக்கும் பொருந்தாது. 

நம்மால் கட்டுப்படுத்த முடியும் வரை அது உணவு. 

உணவு நம்மைக் கட்டுப்படுத்தத் தொடங்கினால் அது அடிமைத்தனம் என்கிறார் டாக்டர். 

அதை நினைவில் வைத்து சரியான முயற்சிகளை விழிப்புடன் மேற்கொண்டால் ஆரோக்கியம் நிலைத்திருக்கும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்