Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'சிங்கப்பூர்-சீனா இடையே கருத்து வேறுபாட்டைக் காட்டிலும் பொதுவான நலன் பெரிது'

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே எப்போதாவது ஏற்படும் கருத்து வேறுபாட்டைக் காட்டிலும், பொதுவான நலன் பெரிது எனத் துணைப் பிரதமர் திரு. தியோ சீ ஹியென் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே எப்போதாவது ஏற்படும் கருத்து வேறுபாட்டைக் காட்டிலும், பொதுவான நலன் பெரிது எனத் துணைப் பிரதமர் திரு. தியோ சீ ஹியென் கூறியுள்ளார்.

அமைதியான, வளர்ச்சி காணும் வட்டாரத்தை உருவாக்குவதே, அந்தப் பொதுநலன். 

ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற கிழக்காசிய நிலையத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் திரு. தியோ பேசினார். 

சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவு, பரந்துபட்டது என்றும், நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது என்றும் அவர் சொன்னார். 

இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான சூச்சோவ், தியான்ஜின், சொங்சிங்-ஆகிய மூன்று திட்டங்களை அவர் சுட்டிக்காட்டினார். 

முக்கியக் கட்டங்களில், சீனாவின் வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு சிங்கப்பூர் எவ்வாறு ஆதரவளித்து வந்துள்ளது என்பதற்கு அந்த மூன்றும் நல்ல எடுத்துக்காட்டுகள் என்றார் திரு. தியோ. 

பெரும்பாலான விவகாரங்களில் இரண்டும் ஒரே கருத்தையே கொண்டுள்ளன. 

ஆனால், மிக நெருங்கிய நண்பர்களுக்கு இடையிலும் அக்கம்பக்கத்தார் இடையிலும்கூட சில விவகாரங்களில் மாறுபட்ட கருத்துகள் தோன்றுவதுண்டு என்பதைத் திரு. தியோ சுட்டினார். 

சிங்கப்பூர்-சீனா இருதரப்பு உறவு இன்னமும் முழுமையாகச் சீரடையவில்லை என்ற ஊகத்துக்கிடையே அவரது கருத்து வெளியாகியுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்