Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்திராணி ராஜாவின் கருத்துகளுக்குப் பதிலளித்த லீ சியென் யாங்

சிங்கப்பூரின் முதல் பிரதமரான அமரர் திரு லீ குவான் யூ-வின் உயில் பற்றி, சட்ட , நிதித் துறைகளுக்கான மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா வெளியிட்ட கருத்துகளுக்கு, அமரர் திரு. லீயின் இளைய மகனான திரு. லீ சியேன் யாங் (Lee Hsien Yang) பதிலளித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
இந்திராணி ராஜாவின் கருத்துகளுக்குப் பதிலளித்த லீ சியென் யாங்

(படம்: TODAY Online)

சிங்கப்பூரின் முதல் பிரதமரான அமரர் திரு லீ குவான் இயூவின் உயில் பற்றி, சட்ட , நிதித் துறைகளுக்கான மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா வெளியிட்ட கருத்துகளுக்கு, அமரர் திரு. லீயின் இளைய மகனான திரு. லீ சியென் யாங் (Lee Hsien Yang) பதிலளித்துள்ளார்.

அந்த விவகாரம் பற்றி, குமாரி இந்திராணி, முன்னதாக தமது Facebook பக்கத்தில் சில கருத்துகளை வெளியிட்டிருந்தார். அதன்படி, அவர் அமரர் திரு. லீயின் உயிலை எழுதியவர் யார் என்பது பற்றி முரண்பாடான தகவல்கள் வெளியாகி இருப்பதை சுட்டினார்.

மேலும், அந்த உயிலை எழுதியாகக் கருதப்படும் வழக்குரைஞர், சிங்கப்பூர் சட்டத்தின் கீழ், தன்னிச்சையாக விசாரிக்கப்படவேண்டும் என்றார் அவர்.

அதுமட்டுமின்றி, அமரர் திரு. லீ, தமது இறுதி உயிலை வாசித்துப் பார்த்து புரிந்துகொள்வதற்கு போதுமான கால அவகாசம் அளிக்கப்பட்டதா என்றும் குமாரி இந்திராணி ராஜா கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி, 38  ஆக்ஸ்லி ரோட்டில் உள்ள தமது வீடு இடிக்கப்படுவதற்கான அம்சங்கள், உயிலில் மீண்டும் இணைக்கப்பட்டது பற்றி அமரர் திரு லீ அறிந்திருந்தாரா என்றும் குமாரி இந்திராணி கேட்டார்.

அந்த வகையில்,  38  ஆக்ஸ்லி ரோட்டில் அமைந்துள்ள அமரர் திரு லீயின் வீடு பற்றிய அவரது சிந்தனையைப் புரிந்துகொள்ளும் நோக்கத்திலேயே அமைச்சர் நிலைக் குழு அமைக்கப்பட்டதாக, குமாரி இந்திராணி விவரித்தார்.

அதற்குப் பதிலளித்த அமரர் திரு. லீயின் இளைய மகனான திரு லீ சியென் யாங், அத்தகைய கருத்துகள் தமது தந்தையை அவமதிப்பது போன்று இருப்பதாகக் கூறினார்.  கேம்பிரிஜ் (Cambridge) பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற வழக்குரைஞரான தமது தந்தை, தம்முடைய சொந்த உயிலைப் புரிந்துகொள்ள இயலாதவர் அல்ல என்று அவர் தமது Facebook பக்கத்தில் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்