Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொருத்தமான பள்ளியைத் தெரிவு செய்வதை எளிமையாக்கும் புதிய இணைய வசதி அறிமுகம்

மாணவர்களும் பெற்றோரும், தங்களுக்குப் பொருத்தமான பள்ளியைத் தெரிவு செய்வதை எளிமையாக்கும் புதிய இணைய வசதி அறிமுகமாகியுள்ளது.

வாசிப்புநேரம் -

மாணவர்களும் பெற்றோரும், தங்களுக்குப் பொருத்தமான பள்ளியைத் தெரிவு செய்வதை எளிமையாக்கும் புதிய இணைய வசதி அறிமுகமாகியுள்ளது.

மாணவரின் தேவைகளுக்கு ஏற்றவாறு பள்ளிகளைத் தெரிவு செய்து தருவது அந்த அதன் நோக்கம்.

சரியான பள்ளியைத் தெரிவு செய்வது கடினமான ஒரு செயல்..

அதிக நேரம் பிடிக்கும் செயலும்கூட. ஆனால் இனி, வீட்டில் இருந்தபடியே பொருத்தமான 6 பள்ளி எது என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

அரசாங்கத்தின் பொதுத் தகவல் இணையவாசலான data.gov.sg, அண்மையில் இந்த School Picker எனும் இணைய வசதியை அறிமுகம் செய்தது.

பல்வேறு பள்ளிப் பெயர்களைக் கொண்ட பட்டியல் அதில் இடம் பெற்றிருக்கும். முதலில் மாணவர் சேர விரும்பும் வகுப்பின் நிலையைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர், வீட்டு முகவரி, விரும்பும் துணைப்பாட நடவடிக்கை, சிறப்புப் பாடத்திட்டங்கள் முதலியவற்றின் விவரங்களோடு, எவ்விதமான பள்ளி தேவை என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்யப்படும் விவரங்களின் அடிப்படையில், பொருத்தமான பள்ளிகளின் பட்டியலை அந்த இணையப்பக்கம் பட்டியலிடும்

மேலும் அந்தப் பள்ளிகள் எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளன?  எவ்வாறு அங்கு பயணம் செய்வது? பள்ளியில் சேர்வதற்குத் தேவைப்படும் அடிப்படைப் புள்ளிகள் எவ்வளவு? அவை வழங்கும் பாடத்திட்டங்கள் என்னென்ன? என்பன போன்ற விவரங்களை, அந்த இணையத்தளம் வழங்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்