Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாலையில் தவித்த ஆடவருக்கு உதவிக்கரம் நீட்டிய போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி

தீவு விரைவுச் சாலையில் தனியாகத் தவித்து கொண்டிருந்த ஓர் ஆடவருக்குப் போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் உதவிக் கரம் நீட்டிள்ளார். 

வாசிப்புநேரம் -
சாலையில் தவித்த ஆடவருக்கு உதவிக்கரம் நீட்டிய போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி

படம்: Muhammad Fithri

தீவு விரைவுச் சாலையில் தனியாகத் தவித்து கொண்டிருந்த ஓர் ஆடவருக்குப் போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் உதவிக் கரம் நீட்டிள்ளார்.

அவரின் இச்செயல் இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

நேற்று, சிங்கப்பூர்க் காவல் துறை ஃபேஸ்புக்கில் வெளியான பதிவில், முகமது ஃபித்ரி என்பவர், காவல் அதிகாரியின் செயலை வெகுவாகப் பாராட்டிள்ளார்.

வாகனம் பழுதானதால் தவித்துக் கொண்டிருந்த மலேசிய மோட்டர் சைக்கிளோட்டிக்கு உதவ, திரு. ஃபித்ரி தமது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். அப்போது அங்கு வந்த அடையாளந் தெரியாத போக்குவரத்துக் காவல் அதிகாரி, அவர்கள் இருவருக்கும் மற்ற வாகனங்களால் ஆபத்து நேராதவண்ணம் தமது காரை நிறுத்திப் பாதுகாப்பு வழங்கினார்.

அந்த அதிகாரியின் செயல், இருவரையுமே நெகிழ வைத்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார் திரு.ஃபித்ரி. அவரின் ஃபேஸ்புக் பதிவு 1000 தடவைக்கு மேல் பகிரப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்