Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்குள் நாய்குட்டிகளைக் கடத்த முயற்சி

உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடி வாயிலாக 11 நாய்குட்டிகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடி வாயிலாக 11 நாய்குட்டிகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட கார் எரிபொருள் தொட்டியில் அவை அடைத்து வைக்கப்பட்டிருந்தன.

மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்தபோது நாய்க்குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

நாய்க் குட்டிகளோடு, மலேசியாவைச் சேர்ந்த 43 வயது ஓட்டுநர், வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்திடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூருக்குள் கடத்தப்படும் விலங்குகளால் நோய்கள் பரவும் ஆபத்து அதிகம் என்று என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் குறிப்பிட்டது.

வெளிநாடுகளிலிருந்து பறவைகள் விலங்குகள் ஆகியவற்றை வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையத்தின் உரிமம் இன்றி இறக்குமதி செய்வோருக்கு அதிபட்சமாக $10,000 அபராதம், ஓராண்டு சிறைத்தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்