Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தொலைந்து போன EZ-லிங்க் அட்டைகளுக்கு இப்போது இழப்பீடு பெறலாம்

EZ-link பயண அட்டைகளுக்கான "Activate!" சேவைக்குப் பதிவுசெய்துகொண்டவர்கள், இனி அவர்கள் அட்டை தொலைந்துபோனால் 15 வெள்ளி வரை இழப்பீட்டுத் தொகையைப் பெறமுடியும்.

வாசிப்புநேரம் -
தொலைந்து போன EZ-லிங்க் அட்டைகளுக்கு இப்போது இழப்பீடு பெறலாம்

(படம்: Channel NewsAsia)

EZ-லிங்க் பயண அட்டைகளுக்கான "Activate!" சேவைக்குப் பதிவுசெய்துகொண்டவர்கள், இனி அவர்கள் அட்டை தொலைந்துபோனால் 15 வெள்ளி வரை இழப்பீட்டுத் தொகையைப் பெறமுடியும்.

EZ-லிங்கும் FWD காப்பீடு நிறுவனமும் செய்துகொண்டுள்ள பங்காளித்துவ ஒப்பந்தம் அதைச் சாத்தியமாக்குகிறது.

"Activate!" சேவைக்குப் பதிவுசெய்தவர்கள் அட்டைகள் தொலைந்தாலோ, திருடுபோனாலோ, இதுவரை 10 வெள்ளி மட்டுமே பெறமுடிந்தது.

அந்தச் சேவையின் வழி, பயண அட்டையின் பயன்பாட்டைக் கண்காணிக்கவும் இயலும்.

3 மாத காலத்தில் 90 பரிவர்த்தனைகள் வரை அவ்வாறு கண்காணிக்க முடியும்.

EZ-லிங்க் பயண அட்டை வைத்திருப்போர், "Activate!" சேவையைப் பயன்படுத்தும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

கடந்த மூவாண்டில் 76ஆயிரத்துக்கும் அதிகமான EZ-லிங்க் அட்டைகள் தொலைந்ததாகப் புகார் செய்யப்பட்டதாய்த் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்