Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

உற்பத்தித் துறையின் வளர்ச்சிப் பொருளியல் விரிவடைய உதவியுள்ளது

உற்பத்தியில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சி, சிங்கப்பூர் பொருளியல் எதிர்பார்த்ததைவிட விரிவடைய உதவியிருக்கிறது. சிங்கப்பூர் பொருளியல் இவ்வாண்டின் முதல் காலாண்டில், ஓராண்டுக்கு முன்னருடன் ஒப்பிடுகையில், 2.7 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

வாசிப்புநேரம் -
உற்பத்தித் துறையின் வளர்ச்சிப் பொருளியல் விரிவடைய உதவியுள்ளது

(படம்: Channel NewsAsia)

உற்பத்தியில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சி, சிங்கப்பூர் பொருளியல் எதிர்பார்த்ததைவிட விரிவடைய உதவியிருக்கிறது.

சிங்கப்பூர் பொருளியல் இவ்வாண்டின் முதல் காலாண்டில், ஓராண்டுக்கு முன்னருடன் ஒப்பிடுகையில், 2.7 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

முன்னைய காலாண்டில் பதிவான 2.9 விழுக்காட்டு வளர்ச்சியைக் காட்டிலும் அது குறைவே.

இவ்வாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, ஒரு விழுக்காட்டுக்கும் 3 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று வர்த்தக, தொழில் துறை அமைச்சு தொடர்ந்து முன்னுரைக்கிறது.

வளர்ச்சி, 2 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகப் பொருளியலுக்கான முன்னுரைப்பு, இவ்வாண்டின தொடக்கத்தில் சற்று மேம்பட்டிருப்பதாக அமைச்சு கூறியது.

இருப்பினும், சீனாவின் மெதுவடைந்துவரும் பொருளியல் வளர்ச்சி, இவ்வாண்டு முழுமைக்கும் முதலீடுகளைப் பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்