Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிட்டி ஹார்வெஸ்ட் நிதி மோசடியாளர்கள்: எந்த அறநிறுவனத்தையும் நிர்வகிக்க முடியாது

சிட்டி ஹார்வெஸ்ட் (City Harvest) தேவாலயத்தின் நிதியைக் கையாடிய வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட 6 பேரும், எவ்வித அறநிறுவனத்தை நடத்துவதற்கும் நிர்வகிப்பதற்குமான அதிகாரத்தை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
சிட்டி ஹார்வெஸ்ட் நிதி மோசடியாளர்கள்: எந்த அறநிறுவனத்தையும் நிர்வகிக்க முடியாது

(படம்: Channel NewsAsia)

சிட்டி ஹார்வெஸ்ட் (City Harvest) தேவாலயத்தின் நிதியைக் கையாடிய வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட 6 பேரும், எவ்வித அறநிறுவனத்தை நடத்துவதற்கும் நிர்வகிப்பதற்குமான அதிகாரத்தை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களில், அந்தத் தேவாலயத்தைத் தோற்றுவித்த கோங் ஹீயும் ஒருவர்.

தேவாலயத்தின் 50 மில்லியன் நிதியைக் கையாடியதற்காக அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை மோசடி, ஏமாற்று போன்றவை அந்த 6 பேரும் புரிந்த குற்றங்களில் அடங்கும் எனக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு கூறியது.

ஆகையால், அவர்கள் அறநிறுவனத்தை நடத்துவதற்கும் நிர்வகிப்பதற்குமான அதிகாரத்தை அரசாங்கம் நிரந்தரமாக ரத்து செய்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்