Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

முதிர்ச்சியடைந்த வட்டாரங்களில் வீடுகளுக்கான தேவை அதிகரிப்பு

முதிர்ச்சியடைந்த கேலாங், பிடாடாரி வட்டாரங்களில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வாசிப்புநேரம் -
முதிர்ச்சியடைந்த வட்டாரங்களில் வீடுகளுக்கான தேவை அதிகரிப்பு

டக்கோட்டா பிரீஸ் வீடமைப்பு பேட்டையின் ஓவிய வடிவாக்கம். (படம்: HDB)

முதிர்ச்சியடைந்த கேலாங், பிடாடாரி வட்டாரங்களில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அண்மையில் விற்பனைக்கு விடப்பட்ட BTO எனப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகளில் பெரிய வீடுகள் அதிகப் பிரபலமாக இருக்கின்றன.

கேலாங்கின் டக்கோட்டா பிரீஸ் பேட்டையில் நான்கறை வீடுகளுக்குக் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அங்கு வீடுகளின் விலை 489,000 வெள்ளியிலிருந்து ஆரம்பமாகிறது.

பிடாடாரி வட்டாரத்தின் உட்லீ பேட்டையில் ஐந்தறை வீடுகளுக்கும்,
பல-தலைமுறை வீடுகளுக்கும் அதிகமானோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

அங்கு ஐந்தறை வீட்டின் விலை சுமார் 579,000 வெள்ளி.

பல-தலைமுறை வீட்டின் விலை சுமார் 622,000 வெள்ளி.

இந்த வீடுகளுக்குச் சுமார் நாலரை மடங்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்