Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மெர்ப்பாத்தி ரோட்டில் மூன்று தரை வீடுகளைக் கையகப்படுத்தியது சிங்கப்பூர் நில ஆணையம்

மெக்பர்சன் பகுதியில் அமைந்துள்ள மெர்ப்பாத்தி ரோட்டில் மூன்று தரை வீடுகளைச் சிங்கப்பூர் நில ஆணையம் கையகப்படுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: மெக்பர்சன் பகுதியில் அமைந்துள்ள மெர்ப்பாத்தி ரோட்டில் மூன்று தரை வீடுகளைச் சிங்கப்பூர் நில ஆணையம் கையகப்படுத்தியுள்ளது.

மறுசீரமைப்புக்காகவும் டௌன்டவுன் ரயில் பாதையின் கட்டுமானத்திற்காகவும் அங்குள்ள நிலம் கையகப்படுத்தப்படும் என்று 2010இல் அறிவிக்கப்பட்டது. 

அந்த 3 வீடுகளுக்குப் பக்கத்தில் உள்ள இதர 12 வீடுகளின் உரிமையாளர்கள் அங்கிருந்து ஏற்கனவே வெளியேறி விட்டனர். 

கடைசி மூன்று வீடுகளின் உரிமையாளர்கள் சிங்கப்பூர் நில ஆணையத்திடம் இன்று சாவிகளை ஒப்படைக்கத் தவறியதால் அவர்களுக்கு இறுதி எச்சரிக்கையும் சட்டபூர்வக் கையகப்படுத்தலுக்கான அறிவிப்பும் விடுக்கப்பட்டன. 

மாத்தார் ரயில் நிலையத்துக்கு எதிரே உள்ள அந்த இரண்டு மாடி வீடுகளைக் காலிசெய்வதற்கான அவகாசம் கடந்த 20 மாதங்களில் ஐந்து முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அவற்றை 2015ஆம் ஆண்டிலேயே காலி செய்திருக்க வேண்டும்.

வீடுகளில் ஒன்றின் உரிமையாளர்கள் தங்களது வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு இன்னும் புதுப்பிக்கப்படுவதாகவும்படிப்படியாகத் தாங்கள் அங்கு குடியேறவிருப்பதாகவும் தெரிவித்தனர்.

நில ஆணையம் வீடுகளைக் கையகப்படுத்துவதற்கு வீட்டு உரிமையாளர்களுக்கு 1.3லிருந்து 3 மில்லியன் வெள்ளி வரை இழப்பீடு வழங்கியதாக TODAY நாளிதழ் அறிகிறது.

அத்துடன் தேவைக்கேற்பக் கட்டித்தரப்படும் கழக வீடுகளைப் பெறுவதில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

வீடுகளிலிருந்து வெளியேற அவர்களுக்குப் புதன்கிழமையிலிருந்து (ஏப்ரல் 26) 28 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

வெளியேற மறுத்தால் சிங்கப்பூர் நில ஆணையம் வீடுகளைக் கையகப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கும்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்