Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதுப்பொலிவு பெற்றுள்ள புக்கிட் பாஞ்சாங் பங் சுவா குளம்

புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் மழை நீரைச் சேகரிக்கும் பங் சுவா குளம், 6.8 மில்லியன் வெள்ளி செலவில் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

வாசிப்புநேரம் -

புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் மழை நீரைச் சேகரிக்கும் பங் சுவா குளம், 6.8 மில்லியன் வெள்ளி செலவில் புதுப்பொலிவு பெற்றுள்ளது.

பிரதமர் லீ சியென் லூங் அதனை அதிகாரபூர்வமாக இன்று திறந்து வைத்தார்.

பங் சுவா குளத்துக்கு மிக அருகில் சென்று இயற்கையை ரசிக்க, அங்கு அமைக்கப்பட்டிருக்கும் புதிய நடைபாதை வகைசெய்கிறது.

பொதுப் பயனீட்டுக் கழகத்தின் துடிப்பான, அழகிய, தூய்மையான நீர் நிலைகள் திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த நடைபாதை அமைக்கப்பட்டிருக்கிறது.

அந்த 480 மீட்டர் நீள நடைபாதை, அருகில் இருக்கும் சமூக மன்றம் போன்ற மற்ற வசதிகளுடன் குளத்தை இணைக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்