Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நீச்சல் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்கூலிங்

தேசியக் கல்லூரிகள் தடகள சங்க வெற்றியாளர் கிண்ணப் போட்டியின் 100 கஜம் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல் பிரிவில் சிங்கப்பூரின் ஒலிம்பிக் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: தேசியக் கல்லூரிகள் தடகள சங்க வெற்றியாளர் கிண்ணப் போட்டியின் 100 கஜம் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல் பிரிவில் சிங்கப்பூரின் ஒலிம்பிக் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

தங்கப் பதக்கத்தை அமெரிக்காவின் கேலெப் ட்ரெச்செல் தட்டிச் சென்றார்.

போட்டிக்கான இறுதிச் சுற்று இன்று இண்டியானாபோலிஸில் நடந்தது.

100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர் எடுத்துக்கொண்ட நேரம் 43.58 விநாடிகள்.

ஸ்கூலிங் எடுத்துக்கொண்ட நேரம் 43.75 விநாடிகள்.

போட்டியை 45.06 விநாடிகளில் முடித்து ஐந்தாவது நிலையில் வந்துள்ளார் சிங்கப்பூரின் குவா ஸெங் வென்.

டெக்சஸ் பல்கலைக்கழகத்தைப் பிரதிநித்து ஸ்கூலிங்கைக் கொண்ட குழு பங்கேற்ற 200 கஜம் அஞ்சல் நீச்சல் போட்டியில் தங்கம் வென்றது.

அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் 1 நிமிடம் 21. 54 விநாடிகள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்