Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் இணைய வேகம் அதிவிரைவானது

திறன்பேசி, விரிவலை ஆகிய இரண்டு தளங்களிலும் அதிவிரைவான இணைய வேகத்தைக் கொண்டுள்ளது சிங்கப்பூர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: திறன்பேசி, விரிவலை ஆகிய இரண்டு தளங்களிலும் அதிவிரைவான இணைய வேகத்தைக் கொண்டுள்ளது சிங்கப்பூர்.

இணைய வேகத்தை ஆராயும் நிறுவனமான Speedtest அதனைத் தெரிவித்தது.

சிங்கப்பூரில், விரிவலைக் கட்டமைப்பின் சராசரி வேகம் 180.61Mbps.

திறன்பேசியில் அதன் சராசரி வேகம் 44.37Mbps.

நார்வேக்கு அடுத்து உலகிலேயே இரண்டாவது நிலையில் சிங்கப்பூர் உள்ளது.

சிங்கப்பூரின் விரிவலைக் கட்டமைப்பு, திறன்பேசிகளின் வேகத்தில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது.

முந்திய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், அது முறையே 18.1, 16.4 விழுக்காடு என்ற அளவில் அதிகரித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்