Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இலவச விமான நுழைவுச்சீட்டு மோசடி: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் போல் நடித்து மக்களின் தனிப்பட்ட விவரங்களைத் திரட்டும் மோசடி குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எச்சரித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள் போல் நடித்து மக்களின் தனிப்பட்ட விவரங்களைத் திரட்டும் மோசடி குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எச்சரித்துள்ளது.

மின்னஞ்சல், கைபேசி போன்றவற்றின் வாயிலாக மோசடிக் கும்பல் மக்களைத் தொடர்புகொண்டது.

விமான நுழைவுச்சீட்டுகளை வென்றதாகக் கூறி மக்களின் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்பட்டதாக ஃபேஸ்புக்கில் அது குறிப்பிட்டது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இணையத்தளம், சமூக ஊடகப் பதிவுகள் போல் இருக்கும் தளங்கள் குறித்தும் விமான நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சந்தேகம் எழுந்தால், இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் ஆகியவற்றிலிருந்து வரும் தகவல்கள் சரிபார்க்கப்பட வேண்டும் எனவும் அது குறிப்பிட்டது.

மோசடி குறித்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணையத்தளங்களில் மக்கள் புகார் செய்யலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்