Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் பொருளியல்: முதல் 3 மாதங்களில் 2.7% வளர்ச்சி

சிங்கப்பூரின் பொருளியல், இவ்வாண்டின் முதல் 3 மாதங்களில் 2.7 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் பொருளியல், இவ்வாண்டின் முதல் 3 மாதங்களில் 2.7 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

சென்ற ஏப்ரலில் முன்னுரைக்கப்பட்டிருந்த 2.5 விழுக்காட்டைக் காட்டிலும் அது அதிகம். 

சென்ற வருடத்தின் இறுதிக் காலாண்டில் வளர்ச்சி 2.9 விழுக்காடாக இருந்தது.

வர்த்தக, தொழில் அமைச்சு அந்தப் புள்ளி விவரங்களை இன்று வெளியிட்டது. 

உற்பத்தித் துறை ஆண்டு அடிப்படையில் 8 விழுக்காட்டு வளர்ச்சியைக் கண்டுள்ளது.

முந்திய காலாண்டில் அது 11.5 விழுக்காடாகப் பதிவானது.

மின்னியல் பொருட்கள், துல்லியப் பொறியியல் பிரிவுகள் ஆகியவை உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்குக் கைகொடுத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பகுதி மின்கடத்திகள், அவற்றுக்கான உற்பத்திச் சாதனங்களுக்கான தேவை, அனைத்துலக அளவில் அதிகரித்தது அதற்குக் காரணம்.

கட்டுமானத் துறை இவ்வாண்டு 1.4 விழுக்காடு சுருங்கியது.

முந்திய காலாண்டில் அது 2.8 விழுக்காட்டுச் சரிவைக் கண்டது.

மொத்த, சில்லறை வர்த்தகத் துறை இவ்வாண்டு 0.5 விழுக்காடு வளர்ச்சி கண்டது.

முந்திய காலாண்டில் அது 0.4 விழுக்காடாக இருந்தது.

தொழிலாளர் சந்தை மந்தமாக இருக்கும் வேளையில் பயனீட்டாளர்களின் கவனமான போக்கு உணவுச் சேவைகள், சில்லறை வர்த்தகப் பிரிவுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று வர்த்தக, தொழில் அமைச்சுக்கான நிரந்தரச் செயலாளர் திரு. லோ கும் இயென் கூறினார்.

தனியார் துறையின் கட்டுமான நடவடிக்கைகள் வலுவற்றுக் காணப்படுவது கட்டுமானத் துறையைப் பாதிக்கக்கூடும் என்றார் அவர்.     

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்