Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குடியிருப்புப் பகுதிகளில் கடைத்தொகுதிகளைப் புதுப்பிக்க இதுவரை $48 மில்லியன் செலவு

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் கடைத்தொகுதிகளைப் புதுப்பிக்க இதுவரை 48 மில்லியன் வெள்ளியைச்  செலவிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
குடியிருப்புப் பகுதிகளில் கடைத்தொகுதிகளைப் புதுப்பிக்க இதுவரை $48 மில்லியன் செலவு

(படங்கள்: HDB)

வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் கடைத்தொகுதிகளைப் புதுப்பிக்க இதுவரை 48 மில்லியனைச் செலவிட்டுள்ளது.

கழகத்தின் 21 கடைத்தொகுதிகளில் 6, புதிய தோற்றத்தைப் பெற்றுள்ளன.

பழைய கடைத்தொகுதிகளைப் புதுப்பித்து குடியிருப்பாளர்களுக்கு மேம்பட்ட சேவையாற்றுவது நோக்கம்.

2014 அக்டோபரில் இவ்வாறு காணப்பட்ட லோயாங் பாயிண்ட் 2016 டிசம்பரில் இப்படி மாற்றம் கண்டுள்ளது.

தோற்றம் மட்டும் புதிதல்ல.

கடைத்தொகுதியின் பரப்பளவும் 35 விழுக்காட்டுக்கு மேல்.. அதாவது 17,000 சதுர மீட்டருக்கு மேல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அந்த விரிவாக்கம் காரணமாக, கடைகளின் எண்ணிக்கை அறுபதிலிருந்து சுமார் எண்பதுக்கு அதிகரித்துள்ளது.

உணவுக் கடைகள் முன்பைவிட இப்போது 4 மடங்கு அதிகம்.

கார் நிறுத்துமிடத் தளம் ஒன்றும் கூடுதலாகக் கட்டப்பட்டுள்ளது.

அதன்மூலம் 30 விழுக்காடு அதிக இலாபம் கிடைப்பதாக ஒரு கடைக்காரர் கூறினார்.

அதேநேரம் வாடகை முன்பு இருந்ததைப் போலவே மாதம் ஏறக்குறைய 3,000 வெள்ளி.

கடை வாடகை பெரும்பாலும் அதிகம் மாறவில்லை என்று லோயாங் பாயிண்ட் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

டௌன்டவுன் ஈஸ்ட், ஒயிட் சாண்ட்ஸ் போன்ற பாசிர் ரிஸ் பகுதியின் இதர கடைத் தொகுதிகளோடு போட்டிபோட லோயாங் பாயிண்ட் கடைத்தொகுதியை மேம்படுத்த வேண்டிய தேவையிருந்ததாகச் சங்கம் தெரிவித்தது.

சங்கத்தைப் பிரதிநிக்கும் 80 விழுக்காட்டுக்குக் மேற்பட்ட கடைக்காரர்கள் கடைத்தொகுதியைப் புதுப்பிக்கும் முடிவை ஏற்றுக்கொண்டிருந்தனர்.

புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு இலாபத்தில் 60 முதல் 40 விழுக்காடு வரை உயர்வு கண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

புதுப்புது வசதிகளால் கடைத்தொகுதி மேம்பட்ட அனுபவத்தைத் தருவதாக வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்