Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விபத்துகளில் மாண்டோரின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் குறைந்துள்ளது

விபத்துகளில் மாண்டோரின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் குறைந்துள்ளது. ஆயினும், காயங்களை விளைவிக்கும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகப் போக்குவரத்துக் காவல்துறை கூறியது.

வாசிப்புநேரம் -

விபத்துகளில் மாண்டோரின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் குறைந்துள்ளது. ஆயினும், காயங்களை விளைவிக்கும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகப் போக்குவரத்துக் காவல்துறை கூறியது.

கடந்த ஆண்டில் விபத்துகளால் 141 பேர் மாண்டனர். 2013ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 160ஆக இருந்தது.
இருப்பினும், காயங்கள் ஏற்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 8,300 ஆக இருந்தது. 2013ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 7,600.

சிங்கப்பூர் சாலைப் பாதுகாப்பு மாதம் 2017இன் திறப்பு விழாவில் உரையாற்றிய உள்துறை, சுகாதார அமைச்சுகளுக்கான நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின், சாலை விபத்தில் ஏற்படும் ஒரு மரணத்தைக் கூடச் சாதாரணமாகக் கருதக்கூடாது என்றார்.

மோட்டார்சைக்கிளோட்டிகள், வயதான பாதசாரிகள், பிள்ளைகள் ஆகியோரைப் பற்றி அதிகாரிகள் அதிகம் அக்கறை கொள்வதாகத் திரு அம்ரின் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்