Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

திறக்கப்போகும் Apple கடை - தெரிந்துகொள்ள வேண்டியவை

ஆர்ச்சர்ட் ரோட்டில் Apple கடை நாளை திறக்கவிருக்கிறது. அந்தத் தித்திப்பான தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் சிங்கப்பூரின் தொழில்நுட்ப விரும்பிகள்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் ரோட்டில் Apple கடை நாளை திறக்கவிருக்கிறது. அந்தத் தித்திப்பான தருணத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் சிங்கப்பூரின் தொழில்நுட்ப விரும்பிகள்.

Appleஇன் சிங்கப்பூர்க் கடை, உலகக் கடைகளுக்கிடையில் ஆகப் பிரபலமாக இருக்கும் என்று அதன் மூத்த விளம்பர இயக்குநர் டென்னி டுஸா தெரிவித்தார்.அதனைப் பற்றிய சில தகவல்கள்:

1. Apple நிறுவனத்திற்கு உலகெங்கும், 20 நாடுகளில் மொத்தம் சுமார் 500 கடைகள் உள்ளன. கடைகளின் வடிவமைப்பு முறைக்கு அந்நிறுவனம், கடந்தாண்டில் பல புதிய மாற்றங்களைச் செய்துள்ளது. வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவது மாற்றங்களின் நோக்கம்.

2. வெளிநாடுகளிலுள்ள மற்ற கடைகளைப் போன்று Appleஇன் சிங்கப்பூர்க் கடை இருக்கும். கடையின் இரண்டாவது மாடியில் வாடிக்கையாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பைப் பெறலாம்.

3. சுற்றுப்புறத்துக்கு மாசு ஏற்படாத விதத்தில் உருவாக்கப்படும் மின்சக்தியை மட்டும் உபயோகிக்கிறது புதிய கடை. சிங்கப்பூரை மையமாகக் கொண்டுள்ள சூரியசக்தி நிறுவனமான Sunseap குழு, அந்தத் தொழில்நுட்பத்தை வழங்குகிறது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய வளங்களிலிருந்து உற்பத்தி செய்யக்கூடிய மின்சக்திகளை முழுமையாகப் பயன்படுத்தும் முதல் நிறுவனமாக உள்ளது Apple.

4. புதிய கடை, வருபவர்களுக்கு கல்விக்கூடம் போல் இருக்கும். உள்ளூர்ப் புகைப்பட வல்லுநர்கள், படப்பிடிப்பாளர்கள், இசைக் கலைஞர்கள், ஓவியக் கலைஞர்கள், இணைய மேம்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோர் வகுப்பு நடத்துவர்.

5. ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Apple கடை, நாள்தோறும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

(படங்கள்: டுடே )

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்