Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஃபார்ம்பிரைட் நிறுவனத்தின் மீன் கலந்த உணவுப் பொருட்கள் கடைகளிலிருந்து மீட்பு

உறையவைக்கப்பட்ட உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஃபார்ம்பிரைட் (Farmpride), மீன் கலந்த அதன் உணவுப் பொருட்களைக் கடைகளிலிருந்து மீட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஃபார்ம்பிரைட் நிறுவனத்தின் மீன் கலந்த உணவுப் பொருட்கள் கடைகளிலிருந்து மீட்பு

(படம்: AVA)

உறையவைக்கப்பட்ட உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஃபார்ம்பிரைட் (Farmpride), மீன் கலந்த அதன் உணவுப் பொருட்களைக் கடைகளிலிருந்து மீட்டுக்கொண்டுள்ளது.

அந்த உணவுப் பொருட்களில் மீன் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவை மீட்டுக்கொள்ளப்பட்டதாக ஃபார்ம்பிரைட் நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிபிட்டது.

அந்தப் பொருட்களை வாங்கியவர்கள் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

வாங்கிய கடைகளில் உணவுப் பொருட்களைக் கொடுத்துப் பணத்தை முழுமையாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு வாடிக்கையாளர்கள் ஃபார்ம்பிரைட் நிறுவனத்தின் ஃபேஸ்புக் பக்கத்திற்குச் செல்லலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்