Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அமெரிக்காவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணிகளுக்கு விரைவான பாதுகாப்புச் சோதனை

சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணம் செய்வோர் இப்போது 180க்கும் மேற்பட்ட அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்புச் சோதனைகளை விரைவாகக் கடந்துசெல்லலாம்.

வாசிப்புநேரம் -
அமெரிக்காவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணிகளுக்கு விரைவான பாதுகாப்புச் சோதனை

(படம்: AFP)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் பயணம் செய்வோர் இப்போது 180க்கும் மேற்பட்ட அமெரிக்க விமான நிலையங்களில் பாதுகாப்புச் சோதனைகளை விரைவாகக் கடந்துசெல்லலாம்.

TSA PreCheck எனப்படும் அமெரிக்கப் போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகத்தின் சோதனைத் திட்டத்திற்குத் தகுதிபெறும் 37 விமான நிறுவனங்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸும் ஒன்று.

சோதனைத் திட்டத்தில் பங்கேற்கத் தகுதி பெறுவோர், நீண்ட சோதனை வரிசைகளில் நிற்கத் தேவையில்லை, காலணிகள், இடைவார்களை அகற்ற வேண்டியதில்லை, கையில் எடுத்துச் செல்லும் பைகளில் இருந்து மின்னியல் பொருட்களை வெளியில் எடுக்கத் தேவையில்லை.

அமெரிக்கக் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் 85 டாலர் செலுத்தி
PreCheck திட்டத்தில் சேரலாம். சிங்கப்பூரர்கள் Global Entry எனப்படும் பயணிகள் திட்டத்தின் வழி PreCheck திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் NEXUS, SENTRI ஆகிய அமெரிக்கக் குடிநுழைவுத் திட்டங்களின் வழி PreCheck திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

PreCheck சோதனைத் திட்டத்தை விரிவாக்கம் செய்வதால் குடிநுழைவுச் சோதனை முறையை எளிமையாக்குவதுடன் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும் என அமெரிக்கப் போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்