Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

துவாஸ் வெஸ்ட் நீட்டிப்பு - 4 புதிய ரயில் நிலையங்கள், ஜூன் 18 முதல்

துவாஸ் வெஸ்ட் நீட்டிப்பில்,  வரும் ஜூன் 18ஆம் தேதி முதல், 4 புதிய ரயில் நிலையங்கள்  செயல்படத் தொடங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருக்கிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: துவாஸ் வெஸ்ட் நீட்டிப்பில், வரும் ஜூன் 18ஆம் தேதி முதல், 4 புதிய ரயில் நிலையங்கள் செயல்படத் தொடங்கும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருக்கிறது.

கல் சர்க்கல் (Gul Circle), துவாஸ் க்ரெஸன்ட் (Tuas Crescent), துவாஸ் வெஸ்ட் ரோடு (Tuas West Road) துவாஸ் லிங்க் (Tuas Link) ஆகியவை அந்த 4 நிலையங்கள்.

அதன்வழி, ஜூரோங், துவாஸ் தொழிற்பேட்டைகளில் பணிபுரிவோர், தங்களது பயண நேரம் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கலாம். உதாரணத்திற்கு, அங் மோ கியோ ரயில் நிலையம் முதல் துவாஸ் வெஸ்ட் ரயில் நிலையம் வரையிலான பயணம் சுமார் 40 நிமிடங்கள் வரை குறைக்கப்படலாம்.

புதிய நீட்டிப்பிற்கானத் திறப்பு நிகழ்ச்சி ஜூன் 16 ஆம் தேதி நடைபெறும். நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரையில் அது பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்படும். அன்று பொதுமக்கள், நீட்டிப்பில் இலவசமாகப் பயணம் செய்யலாம். அத்துடன் அவர்கள் விளையாட்டுகளிலும் மற்றும் பல நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்று ஆணையம் சொன்னது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்