Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தனிமையை அதிகம் விரும்புகின்றனர் சிங்கப்பூரர்கள்

அண்டை வீட்டாருடன் கலந்துரையாடும் போக்கு கடந்த ஆண்டு வெகுவாகக் குறைந்துள்ளது. சிங்கப்பூரர்களும் நிரந்திரவாசிகளும் அக்கம்பக்கத்தில் நன்கு பழகுவதைக் காட்டிலும் தனிமையையே அதிகம் விரும்புகின்றனர். சிங்கப்பூர்க் கனிவன்பு இயக்கம் நடத்திய ஆய்வில் அது தெரியவந்தது.

வாசிப்புநேரம் -
தனிமையை அதிகம் விரும்புகின்றனர் சிங்கப்பூரர்கள்

கோப்புப் படம்: Today

பிள்ளைகளிடம் சரியான விழுமியங்களை விதைப்பது முக்கியம். ஆனால் நேரமில்லையா?

அதில் பெற்றோர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதை பல பெற்றோர்கள் உணர்ந்துள்ளனர்.

ஆனால் பல வேளைகளில், போதிய நேரமில்லாமல் இருப்பது அதனை சாத்தியமாக்குவதை சவால்மிக்கதாய் மாற்றுகிறது.

சிங்கப்பூர் கனிவு இயக்கம் நடத்திய ஆக அண்மைய கனிவன்பைப் பற்றிய ஆய்வில் அது தெரியவந்துள்ளது.

கனிவாக இருப்பதால் கிடைக்கும் அனுபவங்கள், அவற்றின்மீதான கண்ணோட்டம் ஆகியவை ஆய்வில் ஆராயப்பட்டன.

ஆய்வில், கிட்டதட்ட 3060 பேர் பங்கேற்றனர்.

அதில் பங்கேற்ற பெற்றோர்களுள் 90 விழுக்காட்டினர், பிள்ளைகளுக்கு நற்பண்புகளைக் கற்றுக்கொடுப்பது முக்கியம்.

பெற்றோர்களுக்கு அதில் முக்கிய பங்கிருப்பதாய் சொன்னர்.

அத்தகைய நற்பண்புகளைப் பிள்ளைகளுள் விதைக்க, இன்னும் அதிகமாக செய்யலாம் என்றனர் பெற்றோர்கள்.

ஆனால், கிட்டதட்ட 25 விழுக்காட்டினர், போதிய நேரம் இல்லாததால், நல்ல, முக்கிய விழுமியங்களை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க முடியவில்லை என்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்