Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

துவாஸ் தொழிற்சாலை தீ - காயமடைந்த இரு வெளிநாட்டு ஊழியர்களின் நிலை கவலைக்கிடம்

துவாஸ் தொழிற்சாலையில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட தீச் சம்பவத்தில் காயமடைந்த இரு வெளிநாட்டு ஊழியர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் கூறியுள்ளது. சீனாவைச் சேர்ந்த 27 வயது ஊழியருக்கு உடலில் 66 விழுக்காடுத் தீக்காயங்கள் ஏற்பட்டன.

வாசிப்புநேரம் -
துவாஸ் தொழிற்சாலை தீ - காயமடைந்த இரு வெளிநாட்டு ஊழியர்களின் நிலை கவலைக்கிடம்

படம்: Facebook/SCDF

துவாஸ் தொழிற்சாலையில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட தீச் சம்பவத்தில் காயமடைந்த இரு வெளிநாட்டு ஊழியர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் கூறியுள்ளது. சீனாவைச் சேர்ந்த 27 வயது ஊழியருக்கு உடலில் 66 விழுக்காடுத் தீக்காயங்கள் ஏற்பட்டன.

மற்றொருவர் 39 வயது சீன நாட்டு ஊழியர். அவருக்கு 90 உடலில் 90 விழுக்காடுத் தீக்காயங்கள். இருவரும், சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இருவரின் நிலையையும் சீராக்க, மருத்துவர்களும் தாதியர்களும் அயராது உழைத்து வருவதாக வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் சொன்னது.

தீச்சம்பவம் கிட்டத்தட்ட மாலை 4 மணிக்கு ஏற்பட்டது. சம்பவ இடத்திலிருந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தத் தொழிற்சாலை 28 துவாஸ் அவென்யூ 10ல் இருப்பதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்திருக்கிறது. இரு ஊழியர்களின் குடும்பத்தாரையும் சிங்கப்பூருக்கு அழைத்து வருவது குறித்து சனீ தூதரகத்துடன் இணைந்து செயல்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்