Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் முதல் பஞ்சீ (Bungee) கோபுரம் - ஆகஸ்ட் மாதம் திறக்கும்

சிங்கப்பூரின் முதல் பஞ்சீ (Bungee) சாகசக் கோபுரம், செந்தோசாவில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்படவுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் முதல் பஞ்சீ (Bungee) சாகசக் கோபுரம், செந்தோசாவில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்படவுள்ளது. 50 மீட்டர் உயரமுள்ள அந்தக் கட்டடம், செந்தோசா தீவுக்குப் புத்துயிரூட்டும் திட்டங்களில் ஒன்று.

17 மாடி உயரமுள்ள இந்த ஏ.ஜே. ஹெக்கெட் கோபுரம், சிலோசோ கடற்கரையில் அமைந்துள்ளது.எதிர்வரும் ஆகஸ்ட் முதல், வருகையாளர்கள் அதில் பஞ்சீ சாகச விளையாட்டில் ஈடுபடலாம்.
செங்குத்தான நடைமேடை வழி, தரையைப் பார்த்தவாறு, கோபுரத்தின் ஒரு பக்கமாக பார்வையாளர்கள் நடந்து செல்ல முடியும்.

2015ஆம் ஆண்டில் செந்தோசாவின் வருகையாளர் எண்ணிக்கை 19.5 மில்லியனாக இருந்தது.அதை மேம்படுத்தும் நோக்கில், உலகிலேயே முதல் முறையாக, இரட்டை ஊஞ்சல் கொண்ட பஞ்சீ சாகசக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 12 மாடி உயரத்தில் இருந்து, மணிக்கு 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் மக்கள் அந்தச் சாகசத்தில் ஈடுபடலாம். அதற்கு அவர்கள் செலுத்தவேண்டிய கட்டணம் 60லிருந்து 200 வெள்ளி.
கட்டணம், சற்று அதிகமாக இருந்தாலும் புதுமையான இந்தச் சாகச விளையாட்டு பலரைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்