Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் இரட்டிப்பாகவுள்ள மின்னியல் சாலைக் கட்டணம்

மின்னியல் சாலைக் கட்டணங்களில் நிலப் போக்குவரத்து ஆணையம் மாற்றங்களைச் செய்துள்ளது.

வாசிப்புநேரம் -

மின்னியல் சாலைக் கட்டணங்களில் நிலப் போக்குவரத்து ஆணையம் மாற்றங்களைச் செய்துள்ளது.

ஆக அண்மையக் காலாண்டின் போக்குவரத்து மதிப்பீட்டின் அடிப்படையில் அவை அமைந்துள்ளதாய் ஆணையம் சொன்னது. 

நார்த் போனா விஸ்ட்டா ரோட்டிற்குப் பிறகு துவாஸை நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில், மாலை 6 மணி முதல் ஆறரை மணி வரையிலான கட்டணம் இரு மடங்காகவுள்ளது. 

தற்போது ஒரு வெள்ளியாக இருக்கும் அந்தக் கட்டணம் இனி இரண்டு வெள்ளிக்கு உயரவுள்ளது. 

அடுத்த மாதம் 8ஆம் தேதி அது நடப்புக்கு வரும்.

அதே நாளன்று, காலாங் - பயா லேபார் விரைவுச்சாலையில் டேஃபூ மேம்பாலத்துக்குப் பிறகு, புதிய மின்னியல் சாலைக் கட்டண நுழைவாயில் அமைக்கப்படவுள்ளது. 

காலை 7 மணி முதல், 9.30மணி வரை, அந்தப் பகுதியைக் கடப்போர் 2 வெள்ளிக் கட்டணத்தைச் செலுத்த நேரிடும்.

போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாய் ஆணையம் கூறியது.

அடுத்தபடியாக, ஜூன் பள்ளி விடுமுறைக் காலத்திற்கான மின்னியல் சாலைக் கட்டணங்கள் அடுத்த மாதம் பரிசீலிக்கப்படும்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்