Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நாசி லமாக் பர்கருக்குப் போட்டி கொடுக்குமா இது?

மெக்டோனல்ட்ஸ் சிங்கப்பூர் தயாரித்துள்ள 'நாசி லமாக்' பர்கரைப் போல ஒரு பர்கரை மலேசியாவின் myBurgerLab வெளியிடவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
நாசி லமாக் பர்கருக்குப் போட்டி கொடுக்குமா இது?

myBurgerLab's

சிங்கப்பூர்: மெக்டோனல்ட்ஸ் சிங்கப்பூர் தயாரித்துள்ள 'நாசி லமாக்' பர்கரைப் போல ஒரு பர்கரை மலேசியாவின் myBurgerLab வெளியிடவிருக்கிறது.

'நாசி ஆயாம் ரென்டாங்' பர்கர் என்பது அந்த பர்கரின் பெயர். myBurgerLab நிறுவனம் தனது பக்கத்தில் புதிய பர்கர் பற்றிய தகவலை வெளியிட்டிருக்கிறது. "நல்ல முயற்சி சிங்கப்பூர், ஆனால்..." என்ற வரியுடன் அதன் பர்கரின் படத்தை myBurgerLab பதிவு செய்தது.

'நாசி லமாக்' பர்கர் எப்படி சிங்கப்பூரின் தேசிய தினத்திற்காகச் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளதோ, அதுபோல் மலேசியாவின் தேசிய தினத்தை 'நாசி ஆயாம் ரென்டாங்' பர்கர் கொண்டாடும் என்று myBurgerLab சேனல்நியூஸ் ஏஷியாவிடம் தெரிவித்தது.

மலேசியாவின் தேசிய தினம், ஆகஸ்ட் 31ஆம் தேதி. அதனைக் கொண்டாட மெக்டோனல்ட்ஸ் மலேசியா எதுவும் வெளியிடாததால் தங்களிடம் பலர் அது குறித்த வேண்டுகோள்களை அனுப்பியதாக myBurgerLab கேட்டுக்கொண்டது.

'நாசி ஆயாம் ரென்டாங்' பர்கர் அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படலாம் என்று myBurgerLab மறைமுகமாகக் கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்