Images
  • DPM
    (படம்:  Channel NewsAsia)

"ஆசியான் பாதுகாப்பை வலுப்படுத்த உறுப்பு நாடுகளின் பங்களிப்பு தேவை": தியோ சீ ஹியேன்

ஆசியானை மேலும் பாதுகாப்பான வட்டாரமாக உருவாக்க, உறுப்பு நாடுகள் தொடர்ந்து கூட்டாகப் பணியாற்ற வேண்டும் என்று துணைப் பிரதமர் தியோ சீ ஹியேன் (Teo Chee Hean) கூறியுள்ளார்.

இந்த வட்டாரத்தில் எல்லை கடந்த குற்றச் செயல்களும், பயங்கரவாத நடவடிக்கைகளும் அதிகரித்துள்ள நிலையில், அது அவசியம் என்றார் அவர்.

ஆசியான் காவல்துறைக் கருத்தரங்கின் தொடக்கவிழாவில் திரு
தியோ உரையாற்றினார்.

ஆசியான் நாடுகள் உரிய நேரத்தில் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதை மேம்படுத்த, தொழில்நுட்பமும், தகவல்தொழில்நுட்பத் தீர்வுகளும் அவசியம் என்பதை அவர் சுட்டினார்.

இன்றைய நிகழ்ச்சியில், சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், மேம்பட்ட தகவல் தொகுப்பு முறையை அறிமுகம் செய்து வைத்தார்.

ஆசியான் நாடுகளின் காவல்துறைகள் வேவுத் தகவல்களையும் குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களையும் பரிமாறிக்கொள்ள, அந்தத் தகவல் தொகுப்பு முறை உதவும். 

உங்கள் கருத்து

Top