Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஊபர் வாடிக்கையாளர்கள் 380,000 பேர் கடந்த ஆண்டின் தகவல் ஊடுருவலால் பாதிப்பு

சிங்கப்பூரிலுள்ள ஊபர் வாடிக்கையாளர்களில் 380,000 பேர் கடந்த ஆண்டு நேர்ந்த தகவல் ஊடுருவல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் ஊபர் வாடிக்கையாளர்கள் 380,000 பேர் கடந்த ஆண்டின் தகவல் ஊடுருவலால் பாதிப்பு

படம்: AFP/Roslan Rahman

சிங்கப்பூரிலுள்ள ஊபர் வாடிக்கையாளர்களில் 380,000 பேர் கடந்த ஆண்டு நேர்ந்த தகவல் ஊடுருவல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அது தோராயமான எண்ணிக்கை மட்டுமே என அந்நிறுவனத்தின் இணையத்தளம் குறிப்பிட்டது.

செயலி மூலமோ இணையம் மூலமோ நிர்யணிக்கப்பட்ட நாட்டின் தொலைபேசிக் குறியீடும் வாடிக்கையாளரின் உண்மையான வசிப்பிடமும் வேறுபடுவது அதற்குக் காரணம். 

சம்பவத்தைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் அந்தரங்கத் தகவல்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுத்ததாக, ஊபர் குறிப்பிட்டது.

வாடிக்கையாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை எனத் தான் நம்புவதாக ஊபர் தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளைக் கண்காணித்து வருவதாக ஊபர் குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்