Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சதுப்புநிலக் காடுகளை வேறு காரணங்களுக்கு பயன்படுத்துவது ஆபத்து

தென்கிழக்காசியாவில் சதுப்புநிலக் காடுகளை வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்துவது அவற்றுக்குப் பெரிய மிரட்டலாக அமையக்கூடும். 

வாசிப்புநேரம் -
சதுப்புநிலக் காடுகளை வேறு காரணங்களுக்கு பயன்படுத்துவது ஆபத்து

(படம்: AFP/Ted Aljibe))

தென்கிழக்காசியாவில் சதுப்புநிலக் காடுகளை வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்துவது அவற்றுக்குப் பெரிய மிரட்டலாக அமையக்கூடும்.

தேசியப் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் அவ்வாறு கூறுகின்றனர்.

முன்பு கணித்ததைவிட காடுகளை அழிக்கும் விகிதம் குறைவாகவே இருப்பதாய் பல்கலை, அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தது.

ஈராயிரமாம் ஆண்டிலிருந்து 2012-ஆம் ஆண்டு வரை இரண்டு விழுக்காடு, அதாவது, 100 ஆயிரத்துக்கும் அதிகமான ஹெக்டர் பரப்பளவுக் காடுகள் அழிக்கப்பட்டன.

தேசியப் பல்கலையின் புவியியல் பிரிவின் துணைப் பேராசிரியர் Daniel Friess-உம் அந்தப் பிரிவில் முன்பு பணிபுரிந்த Dr Daniel Richards-உம் அந்த ஆய்வை நடத்தினர்.

உலகில் அதிகமான சதுப்புநில மரவகைகள் கொண்ட பகுதி தென் கிழக்காசியா என்று ஆய்வு சொல்கிறது.

கரியமில வாயு வெளியேற்றம், பருவநிலை மாற்றம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிப்பதில் அந்த மரங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று அறிக்கை சொன்னது.

காடுகள் அழிக்கப்படும் விகிதம் தொடர்ந்து குறைவாகவே இருந்தாலும் மியன்மாரில் நெல் விவசாயத்திற்காகவும் மலேசியா, இந்தோனேசியா ஆகியவற்றில் செம்பனைத் தோட்டங்களுக்காகவும் சதுப்புநிலக் காடுகள் தொடர்ந்து அழிக்கப்படுகின்றன.

இந்த நிலைமை தொடர்ந்தால் வட்டாரத்தில் உள்ள சதுப்புநிலக் காடுகள் முற்றாக அழிந்துபோகக்கூடிய அபாயம் இருப்பதாகக் கூறப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்