Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தீப்பொறியை வீசியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

அங் மோ கியோ உணவங்காடி நிலையத்தில் தீப்பொறியை வீசியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர்மீது மேலும் ஒரு குற்றச்சாட்டுப் பதிவாகியுள்ளது. 50 வயது ஆவ் சொங் லூங் உரிமமின்றி வெடிமருந்து வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தீப்பொறியை வீசியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

படம்: Channel NewsAsia

அங் மோ கியோ உணவங்காடி நிலையத்தில் தீப்பொறியை வீசியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர்மீது மேலும் ஒரு குற்றச்சாட்டுப் பதிவாகியுள்ளது. 50 வயது ஆவ் சொங் லூங் உரிமமின்றி வெடிமருந்து வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், மற்றவர்களுக்குக் காயமேற்படும் வகையில் கவனக் குறைவோடு நடந்துகொண்டதாக ஒரு குற்றச்சாட்டுப் பதிவாகியிருந்தது.

அங் மோ கியோ அவென்யூ ஒன்று புளோக் 226C-இல், ஆவ், செப்டம்பர் மாதம் 26ஆம் தேதி தீப் பொறியை வீசியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அது நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஓராண்டுவரையிலான சிறைத் தண்டனையும் ஐயாயிரம் வெள்ளிவரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

இரண்டாவது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மூவாண்டு வரையிலான சிறைத்தண்டனையும் ஐயாயிரம் வெள்ளிவரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

வழக்கு அடுத்த மாதம் 4ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்