Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை - பீஷானில் சுகாதார விழா

பீஷான் வட்டாரவாசிகள் சுமார் 500 பேர் ஒன்றுசேர்ந்து இன்றைய ஞாயிற்றுக்கிழமைப் பொழுதை பீஷான் சமூக மன்றத்தில் கழித்தனர்.

வாசிப்புநேரம் -

தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பின்பற்றுவதே ஆரோக்கியமான வாழ்க்கைமுறை.

அதை வலியுறுத்தும் வகையில் "Stay Fit, Eat Healthy" என்னும் சுகாதார விழா இன்று நடைபெற்றது.

பீஷான் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிக் குழு முதன்முறையாக அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

பீஷான் வட்டாரவாசிகள் சுமார் 500 பேர் ஒன்றுசேர்ந்து இன்றைய ஞாயிற்றுக்கிழமைப் பொழுதை பீஷான் சமூக மன்றத்தில் கழித்தனர்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற பல நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நீரிழிவு நோயை எதிர்க்க, இத்தகைய நடவடிக்கைகள் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பது ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கை.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறை என்ற தலைப்பில் உரையாடல் ஒன்றும் பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை பற்றி உரையாடலில் கலந்துரையாடப்பட்டது.

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் விழா அமைந்தது எனப் பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர்.

உடல் ஆரோக்கியத்தைக் கட்டிக்காப்பதில் பொதுமக்கள் அதிக அக்கறை காட்ட வேண்டுமென்பது ஏற்பாட்டாளர்களின் விருப்பம்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்