Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எலித் தொல்லையால் தற்காலிகமாக மூடப்பட்ட பீஷான் உணவுக் கடை

பீஷானில் உள்ள கிம் சான் லெங் (Kim San Leng) உணவு நிலையத்தின் கடை ஒன்று எலித் தொல்லை காரணமாக 2 வாரங்களுக்குத் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
எலித் தொல்லையால் தற்காலிகமாக மூடப்பட்ட பீஷான் உணவுக் கடை

(படம்: Justin Ong)

பீஷானில் உள்ள கிம் சான் லெங் (Kim San Leng) உணவு நிலையத்தின் கடை ஒன்று எலித் தொல்லை காரணமாக 2 வாரங்களுக்குத் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத் தன் இணையத் தளத்தில் தெரிவித்துள்ளது தேசியச் சுற்றுப்புற அமைப்பு.

அக்கடைக்கு மொத்தமாக 12 குற்றப் புள்ளிகளும் 800 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன.

தேசியச் சுற்றுப்புற அமைப்பின் விதிமுறைப்படி 12 அல்லது அதற்கு மேற்பட்ட குற்றப்புள்ளிகளைப் பெறும் உணவுக் கடைகளின் உரிமம் 2 முதல் 4 வாரங்கள் வரை நிறுத்திவைக்கப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம்.

கிம் சான் லெங் உணவு நிலையம் இவ்வாண்டில் தூய்மைக்கேட்டுப் பிரச்சினைகளில் சம்பந்தப்பட்டிருப்பது இது மூன்றாவது முறை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்